ப.சிதம்பரம், லாலுவுக்கு எதிரான சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: அருண் ஜெட்லி

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. அது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதற்கு பதில் அளித்து, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:-

இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஏற்கனவே நடந்து வரும் விசாரணையின் தொடர்ச்சிதான் இந்த நடவடிக்கை. கணிசமான ஆதாரம் இருந்தால்தான், வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் சோதனையோ அல்லது இதர நடவடிக்கையோ எடுக்கும். உயர் பதவி வகித்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை மறைக்க போலி நிறுவனங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களை விட மாட்டோம். அவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.