ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்! ஆழம் பார்க்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!

அரசியலுக்கு வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்தால் அதனை வரவேற்பதாக மத்திய அமைச்ச்ர பொன்.ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசும் போது தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் தான் அரசியலுக்கு வந்தால் பணத்தாசையுடன் இருப்பவர்களை அருகில் அண்டக் கூட விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை வரவேற்பதாக திமுக செயல்தலைவ்ர மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ரஜனிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.