நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரபல ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் நேற்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன் பின் நான் அரசியலுக்கு வந்தால் ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ளமாட்டேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரபல ஜோதிடரான ஷெல்வி ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு மகர ராசி, திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்னம். அவருக்கு 19-வருடமாக சனி திசை இருந்து வருகிறது.
அதனால் அவருக்கு உடல்நலம் பாதிப்பு அதிகம் இருந்தது. வரும் 31.01.2018 உடன் சனி திசை முடிந்து புதன் திசை ஆரம்பமாகிறது. ரஜினியின் ராசிப்படி புதன் திசையில் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிகம் நாட்டம் இருக்கும்.
அதுவே அவரை அரசியலுக்கு இழுத்து வந்துவிடும். பொதுமக்களுக்காக அறக்கட்டளை ஒன்றை துவங்கி, கல்வி தொடர்பான உதவிகளை செய்வார்.
அப்படியொரு சூழல் அவரது ஜாதகத்தில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் அவர் அரசியலுக்கு வருவதற்கான சுழலும் இருக்கிறது.
இனி அவர் பின்வாங்கமாட்டார், தனிச்சையாக இயங்குவது தான் ரஜினிக்கு பிடிக்கும், ஆகையால் யாருடனும் கூட்டணி இல்லாமல், தனிகட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது, நிச்சயம் வந்தே தீருவார், இனி அவருக்கு எல்லாமே ஜெயம் தான் என்று ஜோதிடர் ஷெல்வி கூறியுள்ளார்.







