அம்மாவுக்காக கோவில் கட்டியுள்ள நடிகர் லாரன்ஸ்

அம்மாவுக்காக சென்னையில் நடிகர் லாரன்ஸ் கட்டியுள்ள கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.

பிரபல திரைப்பட நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சென்னை அம்பத்தூரில் தனது சொந்த செலவில் ராகவேந்திரா கடவுளுக்கு கோவில் கட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த கோவிலுக்கு எதிரில் தனது அம்மாவுக்கும் ஒரு கோவிலை லாரன்ஸ் தற்போது கட்டியுள்ளார்.

அந்த கோவிலில், அவருடைய அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையை வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் அந்த கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.

லாரன்ஸ் தனது அம்மாவுக்காக கட்டியுள்ள கோவிலை அன்னையர் தினமான நாளை பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைக்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.