ஆமீர் கானின் தங்கல் படம் இதுவரை ரூ. 912 கோடி வசூல் செய்து பாகுபலி 2 சாதனையை பகிர உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 படம் ரூ. 1,200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2. ஆமீர் கானின் அசத்தல் நடிப்பில் வெளியாகி ஹிட்டான தங்கல் படம் தற்போது சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சீனர்கள் தங்கல் படத்திற்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர். ரூ.100 கோடி சீனாவில் தங்கல் படம் வெளியான ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.
மேலும் ஹாலிவுட் படமான கார்டியன் ஆப் தி கேலக்ஸி 2 படத்தை விட தங்கலுக்கே சீனர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். ரூ. 912 கோடி சீன மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருவதால் தங்கல் ரூ. 912.6 கோடி வசூலை தொட்டுள்ளது.
முன்னதாக தங்கல் இந்தியாவில் ரூ. 744 கோடியும், தைவானில் ரூ. 20 கோடியும் வசூலித்தது. தங்கல் ஆறு நாட்களில் சீனாவில் ரூ. 148.67 கோடி வசூல் செய்துள்ளது.
சீன பாக்ஸ் ஆபீஸில் சுனாமியாய் வசூல் செய்து வருவதால் இந்த வாரத்திலேயே ரூ. 1000 கோடி கிளப்பில் அது சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கான்கள் ரூ. 1000 கோடி கிளப்பை துவங்கி வைத்த பிரபாஸை பார்த்து கான்கள் பொறாமை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரு கானின் படம் ரூ. 1000 கோடி கிளப்பில் சேர உள்ளது.







