மோடியின் வருகையால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த குளவிகள்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தை முன்னிட்டு மலையகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனொரு கட்டமாக தேயிலைத் தோட்டத்திலிருந்து இரண்டு பெரிய குளவி கூடுகள் அகற்றப்பட்ட விடயம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் இன்று மாலை இலங்கை வருகிறார். அவரை வரவேற்பதற்கு கடந்த ஒரு வாரமாக பல்வேறு பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் இலங்கை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதனால் ஹட்டன் பொலிஸாரினால் எடுக்கப்பட்ட சிரமமான நடவடிக்கைகளை பல சர்வதேச ஊடகங்கள், பல்வேறு விதமாக செய்தி வெளியிட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான குளவிகளை அகற்றுவதற்காக ஒரு தனிப்பட்ட தேனீ பாதுகாப்பு அமைப்பு இந்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது.

வலிமையான கொடுக்குகளை கொண்ட குளவிகள் இலங்கையில் காணப்படும் ஒரு பூச்சி இனமாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் பெரும்பாலும் குளவி தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும், இதில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், ஒரு ஊடகம் சுட்டிகாட்டியுள்ளது.

முக்கிய பிரபுகளுக்காக அந்த பகுதியில் குளவிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பாதுகாப்பாக உள்ளது எனவும் மற்றொரு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மோடியைத் குளவிகள் தொடுவதற்கு திரும்பி வரக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக அந்த பகுதியில் இன்னுமொரு குழு தயாராக உள்ளதாக என்று சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.