தென்சீனக் கடல் விவகாரம், வடகொரியாவின் அடுத்தடுத்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களால் ஆசிய பிராந்தியத்தில் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி, இன்று ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இன்று ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி டொமோனி இனடாவை ஜெட்லி சந்தித்து பேசினார். அப்போது, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜப்பானுடனான கூட்டுக்கொள்கை தொடரும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது என்று ஜெட்லி கூறினார்.

அமெரிக்காவுடன், இந்தியா, ஜப்பான் இணைந்து ஜூலை மாதம் முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சி நடத்தும் திட்டத்தை வரவேற்றுள்ள ஜெட்லி, இது நமது ஆயுதப்படையின் ஒத்துழைப்பு நிலையை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.







