கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்த சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளை சம்பவம் தொடர்பாக காவலாளி கிருஷ்ண பகதுாரை கோவை சிறைக்கு அழைத்து சென்று, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் கெடநாடு எஸ்டேட் உள்ளே புகுந்த, 11 பேர் கும்பல், காவலாளி ஓம் பகதுாரை கொலை செய்துவிட்டு மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுாரை சரமாரியாக தாக்கியது.
கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கேரளாவில் உள்ள ஹவாலா கும்பலைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார்சங்கனாசேரியைச் சேர்ந்த மனோஜ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்த சயானின் உடல்நிலை தேறி விட்டதால் அவனை கைது செய்து, சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். கொள்ளை கும்பல், மூன்று கார்களில் தப்பிச் சென்ற காட்சிகள்கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது, முக்கிய ஆதாரமாக இருக்கும் என நம்புகின்றனர். கோவை சிறை ஜம்சீர் அலி, ஜிதின் ஜோய் ஆகியோர் மோசடி வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும், கோவை மத்திய சிறைக்கு மாற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பின் காவலாளி கிருஷ்ண பகதுாரை சிறைக்கு அழைத்து சென்று, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சசிகலாவிடம் விசாரணை ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்னென்ன? என்பது குறித்து முறையான தகவல்கள் இதுவரை தெரிவில்லை.
பங்களாவிற்குள் கோடிக்கணக்கான பணம் இருந்ததாகவும், கொத்து ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இகை கொள்ளையடிக்கப்பட்டதா? உண்மையிலேயே பணம் இருந்ததா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
காவல்துறையினர் அனுமதி கொடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தினால் விடை கிடைக்கும் என கருதும் போலீசார், இதையடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த காவல் துறையின் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரு விரைவு சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரு சிறை நிர்வாகத்தின் அனுமதி கிடைத்ததும் சசிகலாவிடம் தனி போலீஸ் படையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சசிகலாவிடம் விசாரணை நடத்த கோவையில் இருந்து பெங்களூருவிற்கு தமிழக போலீசார் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.