ராஜிதவை விலக்குங்கள்! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள்

அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சரவை பேச்சாளர் நிலையில் இருந்து அகற்றவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் இன்று ஜனாதிபதியிடம் கோரவுள்ளனர்

அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை அமைச்சரவை பேச்சாளராக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர்கள், ஜோன் செனவிரட்ன, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு இராணுவம் தொடர்பான அமைச்சு வழங்கப்படப்போவதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் தொடர்பிலேயே இந்த மோதல்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.