முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு மேலும் குறைகப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் மஹிந்தவுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை குறைக்க வேண்டாம் என மஹாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மேலும் 50 பொலிஸ் அதிகாரிகளை நீக்குவதற்கு நேற்று மாலை தீர்மானிக்கப்பட்டது.
எனினும் மஹாநாயக்கர்களின் கோரிக்கையை அடுத்து அந்த நடவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் மஹநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் உயர் மட்ட பிரதானிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது மஹிந்தவுக்கான பாதுபாப்பு நடவடிக்கையை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யவில்லை என்றால் கடுமையான தீர்மானம் மேற்கொள்ள நேரிடும் என தேரர்கள் எச்சரித்துள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய தற்போது மஹிந்தவின் பாதுகாப்பிற்காக 157 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.