திமுக மற்றும் பிரிந்து சென்ற அணியினரின் கனவு கானல் நீராகிப் போகும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதில், அவர் பேசும்போது, ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற திமுக மற்றும் பிரிந்து சென்ற அணியினரின் கனவு கானல் நீராகிப் போகும் என்றார்.
நிதிப்பற்றாக்குறையிலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய முதல்வர், தன்னுடைய உழைப்பினால், மக்களோடு மக்களாக இருந்து பொறுப்பிற்கு வந்தவன் தான் என குறிப்பிட்டார். அதேசமயம், தந்தையின் ஆதரவினால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் என்றும் சாடினார்.
இரு அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தைக்கு வேண்டுமென்றே ஒரு சிலர் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர்,
ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற திமுக மற்றும் பிரிந்து சென்ற அணியினரின் கனவு கானல் நீராகப் போகும் என்றார்.







