ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது சசிகலா குடும்பத்தினர் நடத்திய லீலைகள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.
பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் அங்கேயே உயிரிழந்தார். அப்பலோவில் 75 நாட்கள் நடந்த விடயங்கள் ஏதும் வெளிவராத நிலையில், ஜெயலலிதா அனுமதிக்கப்ட்ட வார்டில் இருந்த காவல் அதிகாரிகள் அங்கு சசிகலா குடும்பம் நடந்து கொண்ட விதத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
அவர்கள் கூறுகையில், ஜெயலலிதா அறையின் உள்ளே சசிகலாவும், அவர் உறவினர் சிவகுமார் மட்டுமே அனுமதிக்கபட்டனர்.
மேலும், சசிகலா குடும்பத்தார்கள் அப்பல்லோவில் சாப்பாடு, தூக்கம், விடிய விடிய சினிமா என சகல வசதிகளுடன் நிம்மதியாகவே இருந்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், இரவு நேரங்களில் பிரியாணி ஆர்டர் செய்து சசிகலாவும், அவர் குடும்பத்தாரும் சாப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதா உடல் நிலை மோசமான நிலையில், சசிகலா பிரபல ஜவுளி கடையில் பட்டு புடவைகள் வாங்கினாராம்.
ஜெயலலிதா இறந்தவுடன் அவர் உடல் வைக்கபடும் இடத்தில் தான் கட்ட தான் சசிகலா புடவை வாங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும், ஜெயலலிதா ஆரம்பத்தில் உடல் நலம் தேறிய போது அவர் செய்தியாளர்களை சந்திக்க விரும்பிதை சசிகலா தடுத்து விட்டதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
அதே போல அப்பலோவில் நடந்தது வெளியில் தெரிய கூடாது என அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை சசிகலாவின் ஆட்கள் அகற்றியுள்ளதாகவும் காவல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.







