தேவையான பொருட்கள் :
மூங்கில் அரிசி – 150 கிராம்,
நொய் அரிசி – 150 கிராம்,
சீரகம் – அரைத் தேக்கரண்டி,
ஓமம் – அரைத் தேக்கரண்டி,
பூண்டு – 10 பல்,
சுக்கு – ஒரு துண்டு,
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கு.
செய்முறை :
* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.
* பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஒரு மெல்லிய வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும்.
* பூண்டு நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
* முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும்.
* அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும், கட்டி வைத்துள்ள சுக்கு மூட்டையை அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.
* நன்றாக வெந்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
* சூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ்சி ரெடி.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்