தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் ஸ்லோகம்

ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம்

பொதுப்பொருள் :

துக்கங்களைப் போக்குகிற சரபேஸ்வரரே நமஸ்கரம். பாவிகளுக்கு பயங்கரமாய் தோற்றமளிப்பவரே, விஷ்ணுவிடத்தில் அன்பு கொண்டவரே, மங்கள உருக்கொண்டவரே, சாந்த மூர்த்தியே, உலகத்துக்கெல்லாம் மேம்பட்டவரே, சுகம் அருள்பவரே, மூன்று கண்களை உடையவரே, சரபமூர்த்தியே, நமஸ்காரம்.