பயங்கரவாத ஒழிப்பு சட்டவரைவுக்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெறுகிறது அரசு!!

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்திற்கான கொள்கை மற்றும் சட்ட வரைவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரின் மேற்பார்வை மற்றும் ஏனைய அமைச்சர்களின் கருத்துக்களை கவனத்திற் கொண்டு, இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டத்திற்கான கொள்கை மற்றும் சட்ட வரைவை திருத்தியமைக்கப்பட்டதாக இது முன்மொழியப்பட்டுள்ளது.

இதனை, அமைச்சரவையின் அனுமதிப்பதற்கும், குறித்த கொள்கை மற்றும் சட்ட வரைபின் அடிப்படையில் இலங்கை பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டத்தினை வரைவதற்கு சட்டமாதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.