டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நேற்று இரவு அதிரடியாக டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த நான்கு நாட்களாக அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்போது கைதாகியுள்ளார்.
தினகரன் கைதான விடயம் அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவும், தானும் சிறைக்கு தற்போது சென்று விட்டதால் அதிமுக-வில் நிலவும் சிக்கலான சூழல் தினகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-வின் ஒரு பிரிவுக்காக மத்திய பா.ஜ.க அரசு தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது என தினகரன் நினைக்கிறாராம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க முடிவு செய்துள்ளார்கள்.
இதனிடையில், எம்.எல்.ஏக்களின் இந்த முடிவுக்கு தினகரன் குடும்பத்தினர் தற்காலிகமாக முட்டுகட்டை போட்டுள்ளனர்.







