அதிமுக அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் நீக்கம்!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று(ஏப்ரல் 26ம் திகதி) காலை சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழல் உருவாகும் நிலையில் இன்று பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

நேற்று ஓபிஎஸ் அணி தரப்பு மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

இந்த தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதிமுக தலைமை கழகத்திலிருந்து சசிகலாவின் புகைப்படங்களை அகற்றி புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இன்று அமாவாசை என்பதால் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.