காலம் கனிந்துவிட்டது: பன்னீர் செல்வம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான காலம் கனிந்துவிட்டது என பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், இருதரப்பும் இணைவதற்கான காலம் கனிந்துள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் முயற்சியாக, பேச்சுவார்த்தை நடத்த பரஸ்பரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.