ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி சர்ச்சையை ஏற்படுத்திய பீட்டா அமைப்பு இனிமேல் அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி உணவுகளை பரிமாற தடைவிதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீட்டா எழுதியுள்ள கடிதத்தில் சைவ உணவாளரான மோடி இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்த தகுதியானர் என புகழ்ந்துள்ளது.
இறைச்சி மட்டுமின்றி விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவான பால், முட்டை, தயிர், வெண்ணெய்கட்டி உள்ளிட்டவைகளையும் அரசு விருந்துகளில் படிப்படியாக தவிர்க்க வேண்டும் என மோடிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மொத்த தானியங்களில் 60 சதவீதம் கால்நடைகளுக்கு உணவாக போய்விடுவதாகவும் பீட்டா குறிப்பிட்டுள்ளது.







