பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்த மத்திய அரசு மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்த மத்திய அரசு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 26 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என பேரறிவாளன் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் வழக்கை உடனே விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.