விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஏராளமான கட்சி தொண்டர்களுடன் பேரணியாக வந்த ஸ்டாலின், மாவட்ட பஸ் ஸ்டாண்ட் முன் போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோரை பொலிசார் கைது செய்தனர்.
பிரபல அரசியல் தலைவர்கள் கைது
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சைதாப்பேட்டையில் அனைத்து கட்சிகளின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உட்பட அரசியல் கட்சி தலைவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.










