முக்கிய போட்டிகளை சந்திக்கும் நிலையில் 6 நாட்கள் ஓய்வில் துபாய் சென்றுள்ளார் ஸ்மித்

ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டு வெற்றி, மூன்று தோல்விகள் மூலம் நான்கு புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

கடந்த 17-ந்தேதி நடைபெற்ற பெங்களூருவிற்கு எதிராக போட்டியில் புனே அணி வெற்றிபெற்றது. 17-ந்தேதிக்குப்பின் ரைசிங் புனே அணி 22-ந்தேதி (நாளை) ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 24-ந்தேதி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அந்த அணியின் கேப்டனான ஸ்மித் குடும்பத்துடன் ஒரு வாரம் ஓய்விற்காக துபாய் சென்றுள்ளார். இதனால் அவர் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 26-ந்தேதி கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் கலந்து கொள்கிறார்.

வயிற்று வலி காரணமாக ஏற்கனவே ஏப்ரல் 11-ந்தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக போட்டியில் ஸ்மித் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

புனே அணிக்கு இன்னும் 9 போட்டிகள் உள்ளன. இதில் 7-ல் கட்டாயம் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.