இணையும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி! 7 பேர் கொண்ட குழு அறிவிப்பு

அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும்இணைய முயற்சிகள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளன.

எடப்பாடி அணியில் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல ஓபிஎஸ் அணியில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியில் வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கே.பி.முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர், மாபா பாண்டியராஜன், பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.