போலி முகப்புத்தக கணக்கு தொடர்பில் அதிக முறைப்பாடுகள்

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

போலி முகப்புத்தகம் வைத்திருப்பவர்கள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகப்புத்தக பயனர்கள் தங்களின் இணைய பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசர பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் 850 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திர குப்தா தெரிவித்துள்ளார்.