தனது 4 மாத குழந்தையுடன் ஐ.பி.எல். போட்டியை பார்த்து ரசித்த அஸ்வின்!!!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஸ்வின். தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரே சீசனில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். காயம் காரணமாக தற்போது ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

தற்போது ஓய்வு எடுத்து வரும் அஸ்வின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தவிர்ப்பதில்லை. தொடர்ந்து போட்டிகளை டி.வி.யில் பார்த்து ரசித்து வருகிறார். குறிப்பாக, தனது 4 மாத பெண் குழந்தையுடன் போட்டியை பார்த்து ரசித்து வருகிறார். குழந்தையுடன் இணைந்து எடுத்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, ‘‘நான்கு மாத குழந்தையாக இருந்தாலும், ஐ.பி.எல். போட்டியை ரசிக்க முடியும்’’ என்று பதிவு செய்துள்ளார்.

இதன்மூலம் வீட்டில் ஓய்வில் இருந்தாலும், ஐ.பி.எல். போட்டியை அஸ்வின் விரும்பி பார்த்து வருகிறார் என்பது புலப்படுகிறது.