இரட்டை குடியுரிமை கொண்ட உறுப்பினர்களுக்கு சிக்கல்!

இரட்டைக் குடியுரிமை கொண்ட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர், கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்க உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்களின் போது இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

இரட்டைக் குடியுரிமை கொண்ட மாகாணசபை உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் தற்போது கடமையாற்றி வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் போது இவ்வாறானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது என குறித்த தொகுதி அமைப்பாளர்கள் யோசனை முன்வைக்க உள்ளனர்.