பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட அறிக்கை ஒன்றை வழங்க உள்ளார்.
இந்த ஆண்டின் எதிர்கால பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் இந்த விசேட அறிக்கை வழங்கப்பட உள்ளது.
குறித்த விசேட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் ஆகியனவற்றின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் குறித்த விசேட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அரசியல் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







