சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே
பொதுப் பொருள்: சந்திரனை சிரஸில் ஆபரணமாகத் தரித்தவளும், அழகிய திருமுகத்தையுடையவளும், சஞ்சலமான கடாக்ஷ லீலையையுடையவளும், குந்தபுஷ்பம்போல் அழகை உடையவளும், ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும், முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கருவண்டுகளை உடையவளும், மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும், கவிகளின் கூட்டத்தின் வாக்கிற்கு கல்பவல்லியுமான காமாக்ஷி தேவியை உபாஸிக்கிறேன்.







