அனுமன் அருள் கிட்ட கிரக தோஷங்கள் விலக ஸ்லோகம்

அதுலித பலதாமம் ஸ்வர்ண
சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்
ஞானினாமக்ரகண்யம்
ஸகல குண நிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி

– ஹனுமத் ஸ்லோகம்

பொதுப்பொருள்:

நிகரில்லாத பலம் கொண்டவரே, ஸ்வர்ண பர்வதம் போன்ற ஒளி மிகுந்த தேகம் கொண்டவரே, வனம்போல் மிகுந்த ராட்சஸ குலத்தை பொசுக்கும் தீ போன்றவரே, ஞானிகளின் தலைவரே, ஸகல ஸத்குண நிலையமாக உடையவரே, குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை உள்ளவரே, ராமனுக்கு தூதனாக சென்றவரே, வாதத் திறமை கொண்டவரே, தங்களை வணங்குகிறேன். இத்துதியை ஹனுமத் ஜெயந்தி அன்று ஆரம்பித்து பின் தொடரும் சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அனுமன் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகும்.