டிடிவி தினகரன் கைது? அடித்து சொல்லும் திலகவதி ஐபிஎஸ்

சசிகலா செய்த தியாகத்தால் அவரது அக்கா மகன் தினகரனை ஆர்கே நகரில் வெற்றி பெறச்செய்யவேண்டுமா? என தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறியுள்ளார்.

அப்படி, சசிகலா என்ன தியாகம் செய்தார்? 33 ஆண்டுகள் அம்மாவோடு ஏசி அறையில் இருந்தது ஒரு தியாகமா? அவர் கூப்பிட்ட குரலுக்கு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்திருந்தாரே அது ஒரு தியாகமா?

மேலும், ஆர்கே நகர் தேர்தல் என்பது தினகரனுக்கு வாழ்வா? சாவா? போராட்டம் போன்றது. இதனால் பல சுயேட்சைகளில் கால்களில் விழுந்து, அவர்கள் இந்த தேர்தலில் இருந்து விலகிவிடுமாறு பேரம் பேசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, 1 சதவீத, 0.6 சதவீத ஓட்டுகள் கூட உங்களைப்போன்ற சுயேட்சைகளால் பிரிந்துவிடக்கூடாது, எனவே நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும், அமைச்சர் ஒருவர் தன்னை சுற்றி 4 அடியாட்களை வைத்துக்கொண்டு, ஆர்கே நகரை வலம் வருகிறார். அவர்களிடம் கத்தி, வீச்சருவாள், கற்கள் போன்ற ஆயுதங்கள் எப்போதும் இருந்த வண்ணம் உள்ளது.

மேலும், ஆர்கே நகரில் பணப்பட்டுவாட செய்த தினகரன் ஆதாரங்களுடன் சிக்கியுள்ள நிலையில், அவரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

இன்றும் சிறிது நாட்களில், பன்னீர் செல்வம் முதல்வராவார், எங்களது ஆதரவு அவருக்குத்தான் என ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கர் கூறப்போவது உறுதி. ஏனெனில் அதற்கான சாத்தியக்கூறுகள் தான் தற்போதும் அதிகம் நடந்துள்ளன.

ஆர்கே நகரில் தினகரன் ஜெயிக்கப்போவது கிடையாது, அவர் எப்படியும் கைது செய்யப்படுவார்.

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சசிகலாவை வெறுப்பது போன்று தினகரனையும் வெறுக்கின்றனர்.

அப்படியிருக்கையில், பன்னீர் செல்வத்தை பார்த்து துரோகி என்று சொல்வதற்கு தினகரனுக்கு எவ்வித அறுகதையும் கிடையாது என கூறியுள்ளார்.