புண்ணிய பூமியில் ஓய்வெடுத்த ஜனாதிபதி!

வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்றான பொலநறுவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் செய்தார்.

பொலநறுவை கல்விகாரை புண்ணிய பூமியில் நடைபெற்ற புத்தரிசி பொங்கல் விழாவில் பங்குபற்றிய பின்னர் ஜனாதிபதி பராக்கிரம சமுத்திரத்து அருகில் சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.

இதேவேளை, அங்கு இருந்த மக்களிடம் நலன் விசாரித்து நட்புறவாக கலந்துரையாடியுள்ளார்.