ஜெயலலிதாவின் கைரேகைக்கு ரூ.5 லட்சம்: வைரலாகும் புகைப்படம்

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் கடந்த 7-ம் திகதி சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதி யில் உள்ள 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 (85 சதவீதம்) வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை வருமானவரித் துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மற்றொரு ஆவணத்தில் 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து, ‘ஜெயலலிதாவின் பெரு விரல் ரேகையை பதிவு செய்தவர் டாக்டர் பாலாஜி. அதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப் பட்டுள்ளது’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை டாக்டர் பாலாஜி மறுத்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, 4 முறை சென்னை வந்தார். முதல் 3 முறை அவர் தனியாக வந்தபோது, தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கினார். அக்டோபர் 23-ம் திகதி 4-வது முறையாக வந்தபோது, அவருடன் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

அதனால், அவரை ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்குமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலேயே தங்கினார்.

நவம்பர் 2-ம் திகதி அதிகாலை அவர் லண்டன் புறப்பட இருந் தார். அவர் தங்கியதற்கான ஹோட் டல் கட்டணத்தை நவம்பர் 1-ம் திகதி செலுத்த வேண்டும். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரோ, ‘நாங்கள் ரெயின் ட்ரீ ஹோட்டலில் தான் தங்கச் சொல்லியிருந்தோம்.

அவர் ஏன் தாஜ் கோரமண்டலில் தங்கினார். அதனால், நாங்கள் கட்டணத்தை செலுத்த முடியாது’ என்று தெரிவித்தனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத் துக்கு கொண்டு சென்றேன். அமைச் சர் உடனடியாக தனது உதவியா ளரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து அனுப்பினார். ஹோட்டல் கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 898 செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை அமைச்சரின் உதவி யாளர் கொண்டு சென்றுவிட்டார்.

ஜெயலலிதாவிடம் ரேகை பதிவு செய்ததற்காக, நான் ரூ.5 லட்சம் வாங்கியதாக தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியுள்ளார்.