ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியினர் வசம் செல்லக் கூடியவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தக் கட்சியினர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்க போதுமான ஆசனங்கள் இல்லாத நிலையில் முடிந்தவரை ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட கடந்த ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இருந்த உறுப்பினர்களை தமது பக்கம் இழுக்க முடியுமா என்று அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







