சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

மெக்ஸிகோ நகரிலுள்ள மெட்ரோ ரயில்களில், புதிய பாணியில் திடீரென தோன்றியுள்ள இருக்கை பொருத்தமற்றது, வசதியில்லாதது, இகழ்ச்சிக்குரியது மற்றும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது என்ற சாச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விவாதத்தை கிளப்பியுள்ள ஆண்குறி பொறித்த இருக்கை ஆண்குறியும், நெஞ்சும் புடைத்திருக்கும் பாணியில் அமைக்கப்பட்ட இந்த இருக்கை பெண் பயணிகளால், அனுபவிக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை குறிப்புணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மட்டும் என்று எழுதப்பட்டுள்ளதற்கு அடுத்ததாக, “இங்கு உட்காருவது வசதியில்லை. ஆனால், அன்றாட பயணத்தின்போது, பெண்கள் துன்புறுகின்ற பாலியல் வன்முறையோடு ஒப்பிடும்போது இதை விட மேலானது” என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த இருக்கை நிரந்தரமான ஒன்றல்ல. பொது போக்குவரத்தில் நடத்தப்படும் பாலியல் தொந்தரவை வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சூநோஇஎஸ்டிஹோம்பிரெஸ் என்ற பரப்புரையின் ஒரு பகுதியாகும்.

ஆனால்இ இந்த முயற்சிக்கு மக்களிடம் இருந்து கலவையான மறுமொழி கிடைத்திருக்கிறது. இந்த கவர்ச்சி மிகுந்த செய்தியை பற்றி காணொளி கடந்த 10 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. சிலர் இந்த முயற்சியை புகழ்ந்துள்ள நிலையில், இது ஆபாசமானது, ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பலரும் கூறியுள்ளனர்.

மெக்ஸிகோவில் மிக பெரியதொரு பிரச்சனையாக இருந்த வருகின்ற பாலியல் தொந்தரவுக்கு எதிராக போராடுவதையும், பாலின சமத்துவத்தை பரப்புவதற்காக ஆண்களோடு இணைந்து பணிபுரிவதையும், ஜென்டஸ் என்னும் மெக்ஸிகோ சிவில் சமூக நிறுவனம் ஒன்று முக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஆய்வுத் திட்டத்தை தலைமையேற்று நடத்துகின்ற ரெனி லோப்பஸ் பெரஸ், முக்கிய பிரச்சனை ஒன்றை எடுத்து பரப்புரை மேற்கொண்டு அதனை விவாத பொருளாக்கியிருப்பதை புகழந்திருக்கிறார்.

ஆனால். எல்லா ஆண்களையும் இவ்வாறு பாலியல் தாக்குதல் தொடுப்பவர்களாக பார்க்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவாதத்தை கிளப்பியுள்ள ஆண்குறி பொறித்த இருக்கை “பெண்கள் மீது எல்லா ஆண்களும் வன்முறை மற்றும் தாக்குதல் தொடுக்க கூடியவர்கள் என்று முத்திரை குத்தக்கூடாது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பெண்களின் பாதுகாப்பு பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மெக்ஸிகோவின் தலைநகரான மெக்ஸிகோ நகரத்தின் பொது போக்குவரத்து அமைப்பு மிகவும் கெட்ட பெயரையே இதுவரை தாங்கி வந்துள்ளது. நஜிப் – ரஜினி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா? 2014 ஆண்டு ஐக்கிய ராஜ்ஜியத்தின் யுகோவ் நிறுவனம் உலக அளவில் பொது போக்குவரத்தில் நடைபெறும் பாலியல் கொடுமை பற்றி ஆய்வு நடத்தியது. அதில், சொல்லாலும்.

செயலாலும் பாலியல் தாக்குதல் நடைபெறுவதாக மெக்ஸிகோ நகர மெட்ரே ரயில் அமைப்பு மிகவும் மோசமானதாக இருப்பதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக பெண்களின் பாதுகாப்பிற்காக பல அணுகுமுறைகளை மெக்ஸிகோ நகரம் மேற்கொண்டு வந்துள்ளது.

நம்பமுடிகிறதா? தற்கொலையைத் தடுக்கும் மின்விசிறி! மகளிர் பயணம் செய்ய தனிப்பட்ட ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மகளிர் மட்டும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வன்முறையின் மகளிர் என்றியப்படும் கலை சேகரிப்பு குழு ஒன்று பாலியல் தாக்குதல் தொடுப்போருக்கு எதிராக. கேலி இசை ஒலித்தும், காகித குண்டுகளை எறிந்தும் பெண்கள் தாக்குதல் தொடுப்போராக இருக்க வேண்டும் என்கிறது.

கடந்த ஆண்டு மெக்ஸிகோ நகர மேயர் விசித்திரமான அணுகுமுறையை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கினார். பெண்கள் அச்சுறுத்தலை உணருகின்றபோது, வெளிப்படையாக தெரிவிக்க நகர பிராண்ட் உடைய சிறிய விசில் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

பிரச்சனையின் அடிப்படையை கண்ணோக்காமல், மேலோட்டமாக பார்க்கப்படுவதாக இந்த திட்டம் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.