விமலுக்கு பிணையா? விளக்கமறியலா? இன்று தீர்மானம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவதை இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

ஒன்பது நாட்காளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விமல் வீரவன்ச தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், அவருக்கு பிணை கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.