தந்தை செய்தாலும் பிழை பிழைதான் மகிந்தவிற்கும், நாமலுக்கும் இடையே மோதலா?

எனது தந்தை மட்டுமல்ல யார் செய்தாலும் தவறு தவறு தான் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்ற நாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

தொடர்ந்தும், மைத்திரி கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் பற்றி இப்போது அவர்களே என்னிடம் கேள்வி எழுப்புகின்றார்கள்.

தவறுகளை விசாரிப்பது சரியானதே ஆனாலும் அப்போது மைத்திரியின் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டது எவ்வாறு என்பதும் தேடிப் பார்க்க வேண்டியது கட்டாயம்.

இந்த விசாரணைகள் காரணமாக நான் மகிழ்ச்சியாகவே இருக்கின்றேன். அதேபோன்று மத்திய வங்கி திருட்டைப் பற்றியும் விசாரணை செய்தால் நன்று.

தற்போது புதுவருடப்பிறப்பு வருகின்றது. அதனால் விலை வாசியையும் குறைக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் வாரத்திற்கு ஒரு முறை அரசியல் வாதிகளுக்கு கார்களை கொண்டு வருகின்றார்கள்.

கடந்த கால ஆட்சியிலும் இதுபோன்று நடந்திருக்கின்றது என்றால் அது நடக்கக் கூடாது என்பதற்காகத் தானே மைத்திரிக்கு மக்கள் வாக்களித்தனர்.

எனது தந்தை மட்டுமல்ல யார் செய்தாலும் பிழை பிழையே ஆனால் எமது கால ஆட்சியில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மேலதிக வரவு செலவு திட்டம் கொண்டு வந்து வாகனங்கள் வாங்கவில்லை எனவும் நாமல் தெரிவித்தார்.