இலங்கை அரசின் தலைவர்கள் கூறுவதைப் போன்று சர்வதேச சமூகத்தை நிராகரித்துச்செயற்பட முடியாது. பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. தீர்மானத்தில்சொல்லப்பட்டுள்ளதை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவை இலங்கைக்கு இருக்கின்றது.
இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும்நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துதெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்த கலாநிதிபாக்கியசோதி சரவணமுத்து, நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நாவின் தீர்மானம் தொடர்பில்கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேஇலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகாரஅமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூறுவது போன்று சர்வதேச சமூகத்தை நிராகரித்துச்செயற்பட முடியாது.
இலங்கை அரசு சர்வதேச சமூகத்தை நிராகரித்துவிட்டுமுன்நோக்கிப் பயணிக்கும் என்று நான் நினைக்கவில்லை.
சர்வதேச பங்களிப்பை நிராகரித்துச் செயற்படுமானால் தீர்மானத்திற்கு ஆதரவுவழங்கிய நாடுகள் இலங்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகளை வெளியிடும்.
ஜனாதிபதிமைத்திரிபால உள்ளிட்ட அரச தரப்பினர் இந்த விடயத்தில் உறுதியான தீர்மானத்தைஎடுப்பது அவசியமாகும் என்றார்.







