ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி தொடங்கும் ஓபிஎஸ் அணி!

ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி என்ற பெயரில் புதிய சேனல் தொடங்க ஓபிஎஸ் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாம்.

அதிமுகவுக்கு ஓபிஎஸ் அணி உரிமை கோரினாலும் நமது எம்ஜிஆர், ஜெயா டிவி போன்றவை சசிகலாவின் குடும்ப சொத்தாகத்தான் இருக்கின்றன. இதில் ஓபிஎஸ் அணி உரிமை கோர முடியுமா என்பது கேள்விக்குறி.

தற்போது அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்ற கட்சியின் பெயரில் இயங்கும் ஓபிஎஸ் அணி தங்களுக்கான ஒரு சேனலை தொடங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளதாம். அனைத்து கட்டமைப்புகளுடன் ஒளிபரப்புக்கு ரெடியாக உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்களாம்.

மாஜி அமைச்சர் ஒருவரின் நிறுவனத்தின் இந்த தொலைக்காட்சி அலுவலகம் செயல்படுமாம். அனேகமாக ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பும் வகையில் இந்த சேனலை தொடங்கும் முடிவில் உள்ளதாம் ஓபிஎஸ் அணி.