வடகொரியாவின் தலைவராக இருக்கும் சர்வாதிகாரி கிம் ஜாங் மிகவும் கண்டிப்பானவர் என்பது உலகறிந்த செய்தி.
அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் அண்மையில் சில புகைப்படங்களை வெளியிட்டது.
அதில், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கிம் ஜாங் புன்னகையுடன் ஏவுகணையை பார்வையிடுகிறார்;
ராக்கெட் இன்ஜீன் சோதனை வெற்றியால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.
மேலும், ஏவுகணை படையின் முக்கிய அதிகாரியான கே.பி.ஏவின் கிம் ஜாங் முதுகில் தாவுகிறார்.
அவரும் சந்தோஷமாக அவரை தூக்கி கொள்கிறார்
இந்த புகைப்படம், கிம் ஜாங் மகிழ்ச்சியானவர் மற்றும் இயல்பானவர் என்பதை தன் நாட்டு மக்களுக்கு காட்ட அவர் வெளியிட்டுள்ளார் என கொரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர ஜா-சியோன் லிம் கூறுகிறார்.

மேலும், தான் அடங்காதவர் என்ற தோற்றத்தை சர்வதேச நாட்டுக்கு காட்டவே அவர் விரும்கிறார்.
அதாவது தன் இருமுகங்களை காட்ட அவர் விரும்புகிறார்
நாட்டில் அவரது தலைமையும், நிர்வாகமும் சிறப்பாக இருப்பதாக அரசியல்ரீதியிலான நம்பிக்கையை இந்த புகைப்படம் ஏற்படுத்துகிறது எனவும் சியோன் கூறியுள்ளார்.







