தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் தற்போது இருக்கின்றார். இவரை மாற்றி விட்டு தமிழகத்திற்கு புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைவர் அமித்ஷா முடிவெடுத்துள்ளார்.
வடமாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறுவதற்கு காரணமே அங்குள்ள பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதியவர்களை நியமனம் செய்ததாலே பாஜகவால் அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்ததாம்.
அதேபோன்று தமிழகத்திலும் பாஜகவை வளர்க்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதற்கு தமிழிசையை மாற்றிவிட்டு சர்ச்சைக்குரிய நபரான கருப்பு முருகானந்தம் அல்லது வானதி சீனிவாசன் போன்றோரை நியமிக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளையும் நீக்கி விட்டு தன்னையே தலைவராக நியமிக்க வேண்டும் என்று டெல்லி தலைமை நிர்வாகிகளிடம் போர்க்கொடி தூக்கி உள்ளாராம். இதனால் தமிழகத்தில் விரைவில் புதிய தலைவர் நியமிக்க வாய்ப்பு உள்ளது.







