எங்கிருந்து கிளம்புகிறது இப்படி ஒரு செய்தி. அல்லது இப்படி ஒரு வதந்தி..? சமூகவலைத் தளங்களில் இரண்டு நாட்களாகவே இந்த விஷயங்கள் தான் வைரலாகி கிடக்கிறது.
அதாவது ஜெ., ஆவி ரூபத்தில் வந்து ஆர்.கே. நகரில் சுற்றுகிறார் என்று. நேற்று இரவு கொஞ்சம் ஒரு படி மேலே போய் ஜெ., பன்னீருக்கு வாக்கு கேட்கிறார் என்று செய்தி பரவியது.
இப்போது வந்த செய்தி கூடுதல் அதிர்ச்சி ரகம். அதாவது கொத்தவால் சாவடியில் அதிகாலை காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி ஒன்று வந்ததாகவும் அவர்கள் அனைவரும் ரோட்டோர வியாபாரிகள் என்றும் , அவர்களது மினி லாரியை எதிர் கொண்ட ஜெ., ஆவி பன்னீர் தான் என் வாரிசு. அவருக்கே ஓட்டுப் போடுங்கள் என்று கூறியதாகவும், லாரியில் இருந்த பெண்கள் அலறி அடித்து இறங்கி ஓடியதாகவும் தீயாய் பரவுகிறது செய்தி.
ஆமாம் உண்மை என்று ஒரு தரப்பு வாட்ஸ் ஆப் தளங்களில் வாதிடுகிறார்கள். இன்னொரு தரப்பினர் இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்று மல்லுக்கு நிற்கிறார்கள்.
உயிரோடு இருந்த போதே வெளியில் வராத ஜெ., இறந்த பின்பா வந்து விடப் போகிறார் என்கிறார்கள்?
ஆனால், ஆர்.கே நகர் மக்கள் இதைப்பற்றித் தான் சீரியசாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்
என்ன கொடுமையோ போங்க..!?







