சிறைச்சாலை திணைக்களத்தினால் குண்டுதுளைக்காத பேரூந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறைவைக்கப்படும் குற்றவாளிகள் மற்றும் பாதாளக் குழு உறுப்பினர்களைக் கொண்டு செல்வதற்காகச் இந்த பேரூந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேகாலை சிறைச்சாலையின் உதவி கண்காணிப்பாளரின் எண்ணக்கருவுக்கு அமைய, சிறைச்சாலை பாவனைக்காக இருந்த பேரூந்தை நவீன மயப்படுத்தி, குண்டுதுளைக்காத வகையில் குறித்த பேரூந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பேரூந்து ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாயின் சுமார் 20 இலட்சம் வரை செலவாகும் எனவும், இந்த பேரூந்தை நவீன மயப்படுத்த 7 இலட்சம் ரூபாய் மாத்திரமே செலவானதாகவும் சிறைச்சாலை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.







