துறைமுக அதிகார சபைக்கும் துறைக்கு பொறுப்பான அமைச்சரின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் திருட்டுத்தனமாக இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இது சம்பந்தமான பிரச்சினையை தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பொன்றை சில துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் நடத்தின.
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான வளத்தை இவ்வாறு வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முடியாது என ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திரசிறி மஹகமகே தெரிவித்துள்ளார்.







