பாகிஸ்தான் தேசிய தினம் அந்நாட்டில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு தேசிய தின வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். பதிலுக்கு நவாஸ் ஷெரீப், நடந்து முடிந்த இந்தியக் குடியரசுத் தினத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே தற்போதைய உறவில் சீரற்ற நிலை காணப்படும் சூழலில் பிரதமரின் இந்த வாழ்த்துக் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுதப்படுகிறது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய வெளியுறவு இணை மந்திரி எம்.ஜே.அக்பர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.