சர்வதேச அளவில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 122 வது இடம்!!

சர்வதேச அளவில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.

ஐ.நா. சபையின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் தொலை தொடர்பு என்ற அமைப்பின் சார்பில் 2013-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சிகரமான நாடு என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 155 நாடுகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. அத்துடன் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா ஒரு இடம் பின் தங்கி 14 இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி 16-வது இடத்திலும், இங்கிலாந்து 19-வது இடத்திலும், பிரான்ஸ் 31-வது இடத்திலும் உள்ளன.

நம்பிக்கை இன்மை, ஊழல், சமமாக நடத்தாதது, அதிபர் டிரம்பின் புதிய பொருளாதார நடவடிக்கைகள் விசா தடை போன்றவை அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியுள்ளது.

உலகில் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 118-வது இடத்தில் இருந்தது.

இதில் விசே‌ஷம் என்னவென்றால் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 79 வது இடத்திலும், பாகிஸ்தான் 80-வது இடத்திலும், பூடான் 97-வது இடத்திலும், நேபாளம் 99-வது இடத்திலும், வங்காளதேசம் 110-வது இடத்திலும், இலங்கை 120-வது இடத்தில் முன்னேறி உள்ளன.

தெற்கு சூடான், லைபீரியா, டோகோ, தான்சானியா, புரூண்டி மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.

6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா 152-வது இடத்தில் உள்ளன. ஏமன்,தெற்கு சூடான் 146 மற்றும் 147 வது இடத்தில் உள்ளன. இங்கு வறட்சி மற்றும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

அரசு மீது முழு நம்பிக்கை, பாரபட்சமற்ற சமூகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூலதனம், சமூக ஆதரவு, ஊழல் இல்லாத நிலை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக இத்தகவலை நிலையான அபிவிருத்தி தீர்வுகள் தொலை தொடர்பு அமைப்பு இயக்குனர் ஜெப்ரே சேக்ஸ் தெரிவித்துள்ளார்.