அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்! பகல் கனவு பலித்திடும் என்று இலங்கை அச்சம்!

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் இலங்கை ஒப்பமிடாது எனத்தெரிவித்துள்ள இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், கலப்புநீதிமன்றத்தையும் உருவாக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், இலங்கை விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஐ.நா பாரப்படுத்தவேண்டும் என்ற விடயம் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் இலங்கைப் பிரதமரின் இக்கூற்று வெளிவந்துள்ளது.

இது குறித்த கருத்தினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஜெனீவாப்பேச்சாளர், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2015ம் ஆண்டில்முன்னெடுத்திருந்த மில்லியன் கையெழுத்துப் போராட்டத்தினை ‘பகல் கனவு’ எனகூறியவர்கள் பலர் உள்ளனர்.

1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களின் ஒப்பங்களை ஐ.நா ஆணையாளர் அலுவலகத்திடம்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அன்று ஒப்படைத்திருந்தது.

இன்று, ஐ.நா ஆணையாளர் தனது பரிந்துரையிலேயே இலங்கை அனைத்துலக குற்றவியல்நீதிமன்றத்துடன் ஒப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், ’’அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்’’ என்ற விடயம் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், ‘பகல் கனவு’ இன்றல்ல நாளையென்றாலும், பலித்து விடுமோ என்றஇலங்கையின் அச்சத்தினையே பிரதமர் ரணில் விகரமசிங்கவின் கூற்றுவெளிப்படுத்துவதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.