மர்ம முடிச்சை அவிழ்க்க ஜெ. உடலை பாதுகாக்கிறதா மத்திய அரசு? ஹைகோர்ட்டில் பதில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பாதுகாக்க, ஏற்பாடு எதுவும் செய்யவில்லை என்று மத்திய அரசு சென்னை ஹைகோர்ட்டில் தெரிவித்துல்ளது.

ஜோசப் என்பவர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலை பாதுகாத்து வைப்பது அவசியம் எனவும் கூறி தொடர்ந்த வழக்கில், இவ்வாறு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்லது.

தலைமை நீதிபதி (பொறுப்பு), ஹுலவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி மகாதேவனா ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இந்த விசாரணை நேற்று நடைபெற்றபோது மத்திய அரசு இவ்வாறு கூறிவிட்டது.

பொதுசுகாதாரம், மருத்துவமனை, சட்டம்-ஒழுங்கு போன்றவை மாநில அரசின் கீழ் வரும் பிரச்சினைகள் என்றும், இந்த வழக்கில் மத்திய அரசு பங்குதாரரே கிடையாது எனவும் கூறிவிட்டது.