தேசிய நல்லிணகத்தை ஏற்படுத்தும் பொறுப்பு ஊடகங்களிடம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் தமிழ் ஊடகங்கள் அவ்வாறு நடந்துக்கொள்வதில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணகத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் சில ஊடகங்கள் தமது பொறுப்புத்தன்மையுடன் நடந்துக்கொள்வதில்லை.
குறிப்பாக தமிழ் ஊடகங்களில் அது தொடர்பான செய்திகளோ , கட்டுரைகளோ வருவதில்லை. தமிழ் ஊடகங்கள் அதனை உணர வேண்டும். என்ற வகையில் அவர் அங்கு கருத்து வெளியிட்டுள்ளார்.







