கணவர் மாதவனை தம்மிடம் இருந்து பிரிக்க சசிகலா கோஷ்டி சதி செய்து வருவதாக ‘மேட் பேரவை’ பொதுச்செயலர் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தீபா தொடங்கியது முதலே குழப்பம்தான்… இதன் உச்சமாக தீபாவுக்கு எதிராக கணவர் மாதவனே ஆர்கே நகரில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக தீபா வெளியிட்ட அறிக்கை: அரசியலுக்கு வந்ததால் மிரட்டல்கள் விடப்பட்டன. ஆனால் இதற்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்பட்டு வந்தேன்.
தற்போது கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி தொடங்க வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அழித்து விட வேண்டும் என சசிகலா குடும்பம் எனக்கு தொடர்ந்து பல இன்னல்களை அளிக்கிறது.
தீபக் இதைக் கடந்து என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்தால் என்னுடைய குடும்பத்தை பிரித்துவிட வேண்டும் என்ற கொடிய செயலில் ஈடுபட்டு என் கணவரையே எனக்கு போட்டியாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.
இதற்கு முன்னதாகவே, எனது சகோதரர் தீபக்கையும் விலைக்கு வாங்கி எனக்கு எதிராக செயல்பட வைத்தார்கள். ஜெ. அண்ணனை பிரித்த சசி என் குடும்பத்தை பிரித்து என்னை தனிமைப்படுத்தினால் நான் அரசியலில் போட்டியிடுவது சிரமமாகும் என்பது சசிகலா மற்றும் டிடிவி.தினகரனின் தவறான வியூகம்.
சொந்த குடும்பத்தை ஆரம்ப காலத்திலிருந்தே சதி செய்து பிரித்து குளிர் காயும் சசிகலா தொடர்ந்து இதேபோல பல ஆண்டுகளாக எனது தந்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த அண்ணனுமான ஜெயக்குமாரை பிரித்து வைத்தார்.
தீபக்கை பிரித்தார் எங்கள் குடும்பத்தை போயஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றினார். பின்னர் எனது ஒரே சகோதரரான தீபக்கையும் கையில் எடுத்துக்கொண்டு அவரையும் என்னையும் பிரித்தார். கணவரை தூண்டிவிடுகிறார்கள் இப்போது எனது கணவரை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
யாருடைய மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்வேன். இவ்வாறு தீபா கூறியுள்ளார்.







