இறைவனுக்கு நாம் தேங்காய் உடைத்து வழிபடும் முறை, பல்வேறு தத்துவங்களை உணர்த்துவதாக உள்ளது.
தேங்காயின் உட்புறம் உள்ள இனிய இளநீர், பரமானந் தத்தை குறிக்கிறது. நீரை மூடியபடி இருக்கும் ஓடு, அந்த பரமானந்தத்தை உணர முடியாமல் நம்மை சுற்றியிருக்கும் மாயையான உலகை எடுத்துரைக்கிறது.
தேங்காயை இறைவனின் திருச்சன்னிதியில் உடைப்பதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள மாயையை தகர்த்தெறிந்து பரமானந்தமான இறைவனை அடையலாம் என்பதே இதன் தத்துவம். இதற்கு வேறொரு பொருளும் கூறப்படுகிறது.
தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும் போது, அதிலுள்ள நீர் வடிந்து வெளியேறுகிறது. அதுபோல, இறைவனின் திருப் பாதம் பணியும் நாம், நமது மனதில் உள்ள ஆசைகளையும் வடித்து வெளியேற்றி, உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.